Advertisment

பிரபல நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசன் உருவாக்கப்போகும் வெப் தொடர்!

பனிஜா ஏஷியா என்ற வெப் தொடர் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை தயாரிக்கும் நிறுவனம் கமல்ஹாசனை வைத்து வெப் தொடர் ஒன்றை தயாரிக்க உள்ளது. இந்நிறுவனம்தான் சிஎஸ்கே அணி குறித்த வெப் தொடரான ரோர் ஆஃப் தி லயன், டிவி நடன நிகழ்ச்சியான நச் பாலியே உள்ளிட்டவற்றை தயாரித்தது.

Advertisment

kamalhassan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தற்போது இந்நிறுவனம் டர்மரிக் மீடியா என்று நிறுவனத்துடன் இணைந்து பிராந்திய மொழிகளில் ஸ்ட்ரீமிங் தளங்களுக்கான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குகிறது. இவர்களுடன் இணைந்துதான் நடிகர் கமல்ஹாசன் வெப் சீரிஸை தயாரிக்க உள்ளார். விரைவில் இதுகுறித்தான முழு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இந்தப் புதிய முயற்சி குறித்து பேசியுள்ள கமல்ஹாசன், “நிகழ்ச்சி உருவாக்கும் மற்றும் தயாரிப்பின் நாடி தெரிந்தவர்களுடன் இணைந்து கூட்டாகத் தயாரிக்க வேண்டும் என்று விரும்பினோம். அதனால் பனிஜாய் ஏஷியா நிறுவனத்தின் தீபக்குடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தத் துறையில் அவருக்கிருந்த விரிவான அறிவைக் கொண்டு பிராந்திய மொழியில் இந்தியாவில் பனிஜாய் ஏஷியாவுடன் இணைந்து நிகழ்ச்சி உருவாக்குவதில் இருக்கும் சாத்தியங்கள் எங்களுக்குத் தெரிந்தன. இதை நிஜமாக்குவதில் அவரது துறையைப் பற்றிய புரிதல் உதவியிருக்கிறது. அவர்களுடன் இணைந்து பல்வேறு மொழிகளில், தளங்களில் புரட்சிகரமான விஷயங்களை உருவாக்குவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

kamalhassan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe