Advertisment

ரோபோ சங்கருக்கு கமல்ஹாசன் அறிவுரை

kamal hassan adviced robo shankar

சின்னதிரை மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி கலைஞராக இருந்து திரைத்துறையில் பிரபலமானவர் ரோபோ சங்கர். மாரி, விஸ்வாசம், கோப்ரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக உடல்மெலிந்தபடியே காணப்படுகிறார். இது தொடர்பாக ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், முதலில் ஒரு படத்துக்காக உடல் எடையை குறைத்ததாகவும் பின்பு மஞ்சள் காமாலை நோயால் அப்படி ஆகிவிட்டதாகவும்சொல்லியிருந்தார்.

Advertisment

இந்நிலையில் கமல்ஹாசன் தொலைபேசி வாயிலாக ரோபோ சங்கரிடம் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். மிகவும் அக்கறையுடன்உடல்நலத்தை பார்த்துக் கொள்ளும்படியும், கட்டிங் எல்லாம் இனிமேல் வேண்டாம் எனவும், 'ஜாக்கிரதையா இருக்கணும்' என்றும்அறிவுரை வழங்கினார். பின்பு அவரது மனைவிமற்றும் மகளிடம் பேசி ரோபோ சங்கரை பார்த்துக்கொள்ளும்படி சொன்னார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

robo shankar ACTOR KAMAL HASSHAN
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe