சர்ச்சையைக் கிளப்பிய 'பதான்' படம் வெளியானது - ஷாருக்கான் குறித்து கமல்ஹாசன் பதிவு

kamal hassan about Shah Rukh Khan and his pathaan movie

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள படம் 'பதான்'. இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் முதல் பாடலாகவெளியான 'பேஷரம் ரங்' பாடலில் தீபிகா படுகோனே கவர்ச்சியாக காவி நிற உடை அணிந்து நடனமாடியிருக்கிறார் என்றஇந்துத்துவர்களின்விமர்சனத்தால் பெரும் சர்ச்சை எழுந்தது. அது இன்று வரை தொடர்ந்து வருகிறது.

முன்னதாகபடம் தொடர்பாக பாஜகவை சேர்ந்த மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பிரமான்ஸ் ஆச்சாரியா, பாஜக எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட பலரும் தங்களது எதிர்ப்புகளைத்தெரிவித்திருந்தனர். மேலும் சில இடங்களில் பதான் படத்தை திரையிடக் கூடாது எனக் கூறி படத்தின் பேனர்கள், பதாகைகளை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர். இதனிடையே அண்மையில் டெல்லியில் நடந்த பாஜக தேசியக்குழு கூட்டத்தில், இனி திரைப்படங்கள் குறித்து பாஜகவினர் யாரும் கருத்து கூற வேண்டாம் என பிரதமர் மோடி வலியுறுத்தியதாகவும் ஒரு தகவல் வெளியானது.

இதையடுத்துஅசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா படவிவகாரம் குறித்து ஷாருக்கான் யார்? அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது எனச் செய்தியாளர்களிடம்சொன்னார். பின்பு ஷாருக்கான் தன்னிடம்போனில் பேசியதாகவும், அவருக்கு எந்த அசம்பாவிதமும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்என உறுதியளித்ததாகவும்ட்வீட் செய்தார். இது பேசுபொருளான நிலையில், படத்தை எதிர்த்த விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர், “பதான் படத்தில் செய்த மாற்றங்களால் மகிழ்ச்சியில் உள்ளோம். இதனால், போராட்டம் நடத்தும் முடிவை வாபஸ் பெறுகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

இப்படி ஏகப்பட்ட சர்ச்சையை கிளப்பி எதிர்ப்பை சம்பாதித்த பதான் படம் ஒருவழியாக சொன்ன தேதியில் எந்த தடங்கலும் இன்றி இன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களே இருந்து வரும் நிலையில், ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து மூன்று ஆண்டுகள் கழித்து படம் வெளியாகியுள்ளதால், அவருக்கு பலரும்வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "பதான்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாகக் கேட்கின்றேன். போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது பிரதர்" எனக் குறிப்பிட்டு ஷாருக்கானை வாழ்த்தியுள்ளார். ஷாருக்கானும் கமலும் 'ஹே ராம்' படத்தில் இணைந்து நடித்திருந்தநிலையில், இருவரும் நல்ல நட்போடு பழகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ACTOR KAMAL HASSHAN sharukh khan
இதையும் படியுங்கள்
Subscribe