பிரபல நகைச்சுவை நடிகரும், கதை, திரைக்கதை ஆசிரியரும், வசனகர்த்தாவும், நாடகக்கலைஞருமான கிரேசிமோகன்(66) மாரடைப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். கவலைக்கிடமான நிலையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 2 மணிக்கு காலமானார்.

Advertisment

கமல்ஹாசனுடன் சேர்ந்து கிரேசி 'சதி லீலாவதி, மைக்கேல் மதன காமராஜன், காதலா காதலா, தெனாலி, பஞ்ச தந்திரம், அபூர்வ சகோதரர்கள்,ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதியதுடன் சில வேடங்களில் நடிக்கவும் செய்தார். வசந்த் இயக்கிய பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்திற்கும் வசனம் எழுதினார்.

நடிகர் கமல்ஹாசனுக்கு மிகவும் நெருக்கமாகவர் கிரேசி மோகன். அவருடைய மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.