Advertisment

“சமூக இருள் நீங்க...” - இயக்குநருக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்

 Kamal Haasan wishes the director

சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் ஹெச். வினோத். படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து தொடர்ச்சியாக நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவுஆகிய மூன்று படங்களை இயக்கினார். மூன்று படங்களுமே வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியைப் பெற்ற படங்களாகும். அதற்கு பிறகு முன்னணி நடிகர்கள் பலர் இயக்குநர் ஹெச். வினோத்தை அணுகி தனக்கு ஒரு கதை பண்ணுமாறு அணுகி வந்தனர்.

Advertisment

நடிகர் கமல்ஹாசனும் புதிய தலைமுறை இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வம் கொண்டிருக்கிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்குநர் ஹெச். வினோத் - நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் புதிய படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இயக்குநருக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்தினை கமல்ஹாசன் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், “சமூக இருள் நீங்க, திரை ஒளி பாய்ச்சும்தம்பி ஹெச். வினோத் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

birthday wishes actor kamal hassan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe