Skip to main content

முதல்வரின் அறிவிப்புக்கு கமல்ஹாசன் வரவேற்பு

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

Kamal Haasan welcomed the cm mk stalin Organ Donation announcement

 

முதல்வர் மு.க ஸ்டாலின், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது. 

 

குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்" என குறிப்பிட்டிருந்தார். 

 

இந்த நிலையில் முதல்வரின் இந்த அறிவிப்பை நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பிரியத்திற்குரிய குடும்ப உறுப்பினர் மூளைச்சாவு அடைந்த துயர நிலையிலும், அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்து பிற உயிர்களைக் காக்க முன்வருவது மகத்தான தியாகம். 

 

இந்தத் தியாகத்தைப் போற்றிடும் வகையில் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் எனும் முதல்வரின் அறிவிப்பை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். இந்த அறிவிப்பு உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீபாவளியைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
sivakarthikeyan amaran movie release update

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகர்த்திகேயன் நடித்துள்ள படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படம் உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இதில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதியாக சித்தரித்துள்ளதாக கூறி எதிர்ப்பும் கிளம்பியது. 

இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்தாண்டு தீபாவளியான அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை தினம் என்பதால் வரவேற்பு அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

Next Story

இந்தியன் 2 ; படக்குழு செய்த அதிரடி மாற்றம்

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
indian 2 yrimmed yo 12 minutes

கமல் - ஷங்கர் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வந்த இந்தியன் 2 படம், கடந்த 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. லைகா தயாரித்துள்ள இப்படத்தில் சித்தார்த், விவேக், பிரியா பவானி ஷங்கர், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழியில் உலகம் முழுவதும் வெளியான இப்படம் கலவையான விமரசனங்களே பெற்று வந்தது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து படத்தின் திரைக்கதை, கமல்ஹாசனின் மேக் அப் குறித்து ரசிகர்கள் எதிர்மறையான விமர்சனங்களை வைத்து வந்தனர். குறிப்பாக, இரண்டாம் பாதியில் மிக நீளமாக காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். இதனால், இந்தியன் 2 படத்தில் 15 நிமிடக் காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. 

indian 2 yrimmed yo 12 minutes

இந்த நிலையில் படத்தில் கிட்டதட்ட 12 நிமிட காட்சிகளை குறைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் 11 நிமிடங்கள் 51 வினாடிகள் குறைக்கப்பட்ட  புதிய பதிப்பு, இப்போது அனைத்து திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு ஒரு புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இந்தியன் 3 படமும் உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.