/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/124_30.jpg)
தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரும் பிரபல நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 79 வயதான நடிகர் கிருஷ்ணா திரைத்துறையில் ஐந்து தசாப்தங்களாக பயணித்து கிட்டத்தட்ட 350 படங்களுக்கு மேல் நடித்துள்ளவர்.இவரது நினைவு தினம் இன்னும் சில நாட்களில் வரவுள்ளது.
இந்த நிலையில் ஆந்திரா விஜயவாடாவில் அவரது திருவுருவச் சிலை திறக்கப்பட்டுள்ளது. இதனை கமல்ஹாசன் திறந்து வைத்துள்ளார். இந்தியன் 2 படப்பிடிப்பிற்காக அங்கு சென்றுள்ள கமல், சிலையைத்திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)