Advertisment

“எனக்கு இந்தியன் 2வை விட இந்தியன் 3 தான் பிடிக்கும்” - கமல்ஹாசன்

Kamal Haasan said he like Indian 3 better than Indian 2

Advertisment

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இந்தியன் 2. இப்படம், இந்தியன் 3 அதாவது மூன்றாம் பாகமாகவும் வெளியாகவுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், விவேக், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தியன் 2 படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. கடந்த 1996ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2 படம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற ஜூலை 12ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இந்தியன் 2 படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கிடையில், இப்படத்திற்கான புரமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிலும், இப்படத்தில் நடித்த கமல்ஹாசன் சென்னை, மும்பை என பல்வேறு இடங்களுக்குச் சென்று பம்பரம் போல் சுழன்று புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில், ஒரு இடத்தில் புரமோஷன் பணியில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசன் பேசியதாவது, “உண்மையை சொல்ல போனால், இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட ஒரே காரணம், மூன்றாம் பாகம் தான். நான் மூன்றாம் பாகத்தின் மிகப்பெரிய ரசிகன். வழக்கமாக, படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதி தான் பிடிக்கும் என்று சொல்வார்கள். அது போல், என்னுடைய இரண்டாம் பாதி இந்தியன் 3. இந்தியன் 3 படத்திற்காக மனசுக்குள்ளே நானே கைத்தட்டி கொண்டிருக்கிறேன். நான் அந்த சினிமாவின் ரசிகன். அந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு இன்னும் டைம் இருக்கிறதே என்று எனக்குப் பதற்றமாக இருக்கு” என்று கூறினார்.

indian 2 Kamal Haasan
இதையும் படியுங்கள்
Subscribe