Kamal Haasan reunites with Mani Ratnam after '35 years' in ponniyin selvan

இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'லைகா' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

Advertisment

இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் கமல்ஹாசன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் தொடக்க காட்சியில் கதை சுருக்கம் ஒன்று இருப்பதாகவும், அந்த கதைக்கு கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் 35 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னத்துடன் மீண்டும் கமல்ஹாசன் இணையவுள்ளார். இதற்கு முன்னதாக மணிரத்னம் கமல்ஹாசன் கூட்டணியில் 1987-ஆம் ஆண்டு 'நாயகன்' படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.