/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/9_43.jpg)
தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமான கமல்ஹாசனின் சகோதரரான சந்திரஹாசன், கடந்த 2017ஆம் ஆண்டு காலமானார். இவர் நடிகர் கமல்ஹாசனின் திரை வாழ்க்கை வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தவர். இவரது நடிப்பில் கடைசியாக உருவான 'அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க' படம் வரும் அக்டோபர் 8ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் ட்ரைலரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்ட நடிகர் கமல்ஹாசன், தனக்காக தன்னுடைய அண்ணன் செய்த தியாகம் குறித்த நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், "என் திறமையை வெளிப்படுத்தும் பேரார்வத்தில் தன் திறமையை திரையில் காட்டாமலே போய்விட்டவர் சந்திரஹாசன். அவர் நடித்த கடைசிபடம் ‘அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க’ அக்டோபர் 8ம் தேதிசோனி லைவ் தளத்தில் வெளியாகிறது. என்னை வாழ்த்தியவரை வணங்க கடமைப்பட்டுள்ளேன். ‘ஐயா... அப்பா... உங்கள் படம் 8ம் தேதி ரிலீஸ்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)