Advertisment

ராஜமௌலி இயக்கத்தில் கமல்ஹாசன்

Kamal Haasan in Rajamouli's direction

இந்தியாவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் 'ஆர்ஆர்ஆர்'. இந்த படத்தில் ராம் சரண் ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட்மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

Advertisment

இந்நிலையில் ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'ஆர்ஆர்ஆர்' படத்தை தொடர்ந்து அடுத்ததாக மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் ராஜமௌலி. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தில் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisment

கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூன் 3-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

mahesh babu ss rajamouli ACTOR KAMAL HASSHAN
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe