“அவருக்கு என்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” - ஷாருக்கானை புகழ்ந்த கமல்ஹாசன்

Kamal Haasan praises Shah Rukh Khan

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இந்தியன் 2. கடந்த 1996ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம், 28 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஜூலை 12ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படம், இந்தியன் 3 ஆகவும் மூன்றாம் பாகமாக வெளியாகவுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், விவேக், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தியன் 2 படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இந்தியன் 2 படத்தி டிரைலர் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டிரைலர் வெளியீட்டு விழா தொடர்பாக, நேற்று காலை சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து, இந்தியன் 2 படத்தின் ஹிந்தி வெர்சனான ஹிந்துஸ்தான் 2 பட டிரைலர் வெளியிட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தியன் 2 படத்தின் படக்குழு கலந்து கொண்டனர்.

அதில் பேசிய கமல்ஹாசன், “ஒரு படத்தில் வேலை செய்யும் போது ஸ்டார் அல்லது சூப்பர் ஸ்டார் என்பது முக்கியமில்லை. ஷாருக்கானும் நானும் ஒன்றாக வேலை செய்தபோது, ​​​​நாங்கள் இருவரும் வெறும் மனிதர்களாக இருந்தோம். நான் ஒரு சூப்பர் ஸ்டாரைப் பார்க்கவில்லை. அவர் சூப்பர் இயக்குநரை பார்க்கவில்லை. நாங்கள் நண்பர்கள். உண்மையில் ஷாருக்கான், ஹே ராம் படத்தில் இலவசமாக நடித்து கொடுத்தார்.

அதை எந்த சூப்பர் ஸ்டாராலும் செய்ய முடியாது. அது ஒரு ரசிகரால் மட்டுமே முடியும். அவருக்கு நான் என்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நாங்கள் எங்களை ஸ்டாராக பார்ப்பதில்லை. ரசிகர்களாகிய நீங்கள் எங்களுக்கு பட்டத்தை கொடுக்கிறீர்கள். நாங்கள் அதை மிகவும் வெட்கத்துடன் ஏற்றுக்கொள்கிறோம்” என்று கூறினார்.

indian 2 Kamal Haasan
இதையும் படியுங்கள்
Subscribe