Skip to main content

ஐக்கிய அரபு அமீரக அமைச்சருடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு

 

Kamal Haasan meets UAE Minister

 

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், நடனக் கலைஞர், எழுத்தாளர் எனப் பல துறைகளில் பணியாற்றியுள்ளவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'விக்ரம்' படம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இப்படம், வசூலில் ரூ.400 கோடியை நெருங்கியுள்ளது.

 

கமல் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை 'விக்ரம்' படம் பெற்றுள்ளது. இதனை அடுத்து மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ளார். இந்நிலையில் கமல்ஹாசன், ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சரான ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யானை அவரது மாளிகையில் சந்தித்துள்ளார்.

 

இந்த சந்திப்பில் கமல்ஹாசன், சமீப காலத்தில் உருவாக்கப்பட்ட புதிய ஊடகங்கள் குறித்தும், அடுத்த தலைமுறை அதை எப்படி கையாள்வது என்பதைப் பற்றிய சில விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக  கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.