Kamal Haasan informs Why did he take a year to act in Kalki?

தெலுங்கு முன்னணி நடிகரான பிரபாஸ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம், ‘கல்கி 2898 ஏ டி’. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். பான் இந்தியா படமாக உருவாகும் இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வரவிருக்கிறது.

Advertisment

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த டிரைலரில், வயதான தோற்றத்தில் ஏற்று நடித்திருக்கும் கமல்ஹாசன் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்தப் படம் வருகிற ஜூன் 27ஆம் தேதி திரைக்கு வெளிவர இருக்கிறது.

Advertisment

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் புரோமோசனுக்காக படக்குழு பல இடங்களில் பேட்டி அளித்து வருகின்றனர். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு மும்பையில் இப்படத்தின் படக்குழு புரோமோசன் பணியில் ஈடுபட்டது. அதில், பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, கமல்ஹாசனின் தேர்வு குறித்து தலைப்பு எழுந்தது. அதற்கு பிரபாஸ், ‘இந்தப் படத்தில் கமல்ஹாசனை நடிக்க வைக்கவும், அவரிடம் சம்மதம் வாங்கவும்ஒரு வருட காலமாக காத்திருந்தோம். ஒரு கட்டத்தில், என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள், என்னை விட்டுவிடுங்கள் என்று கமல்ஹாசன் நினைத்திருப்பார்’ என்று கூறினார்.

அதற்குப் பதிலளித்த கமல்ஹாசன், “இது தொந்தரவு பற்றிய கேள்வி அல்ல. அப்போது, சுயசந்தேகத்தை தந்தது. இந்தப் படத்தில் அமிதாப் இதைச் செய்கிறார், பிரபாஸ் அதைச் செய்கிறார். ஆனால், நான் என்ன செய்ய போகிறேன். அதுதான் காரணம். நான் இதற்கு முன்பு வில்லனாக நடித்ததில்லை. அப்படி வில்லனாக நடித்திருந்தாலும், மனநோயாளி கதாபாத்திரத்தில்தான் நடித்திருக்கிறேன். ஆனால், இந்தப் படம் முற்றிலும் வேறு” என்று கூறினார்.

Advertisment