கமல்ஹாசன் வீடு திரும்பினார் - மருத்துவர்கள் அறிவுரை

Kamal Haasan health update returns to home after treatment

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பிலும், 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலுக்கான கட்சிப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதற்கிடையே தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

நேற்று முன்தினம் (23/11/2022) கமல்ஹாசன்காய்ச்சல் காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் கமல்ஹாசன் லேசான காய்ச்சல், இருமல் மற்றும் சளியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இப்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது எனவும் அறிக்கை வெளியிட்டிருந்தது. மேலும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கமல்ஹாசன் தற்போது டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சில நாட்கள் ஓய்வில் இருக்கும்படிமருத்துவர்கள் கமல்ஹாசனுக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே பிரபல நடிகர் குல்ஷன் குரோவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கமலுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ACTOR KAMAL HASSHAN
இதையும் படியுங்கள்
Subscribe