தக் லைஃப் படத்தை தொடர்ந்து ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் கமல். படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தை தவிர்த்து இந்தியன் 3 படத்தை அவர் கைவசம் வைத்துள்ளார். 

Advertisment

தமிழ் சினிமாவில் அதிக விருதுகளை வாங்கிய நபராக இருக்கிறார் கலம்ஹாசன். இதுவரை 5 தேசிய விருது, 20 ஃபிலில் ஃபேர் விருது, 11 திரைப்பட விருது உள்ளிட்ட இன்னும் பல்வேறு விருதுகள் மற்றும் சர்வதேச திரைப்பட விருதுகளை வாங்கியுள்ளார். மேலும் இந்திய அரசால் வழங்கப்படும் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பிரான்ஸ் அரசாங்கத்தால் வழங்கப்படும் கௌரவமிக்க விருதான செவாலியர் விருது ஆகியவைகளை பெற்றுள்ளார். 

Advertisment

இந்த நிலையில் கமல்ஹாசன் மேலும் ஒரு உயரிய விருதை பெற்றுள்ளார். கனடாவில் அல்பெர்ட்டா இந்திய திரைப்பட விழா 2025 நடைபெற்றது. இதில் கோல்டன் பீவர் விருது(Golden Beaver Award) கமல்ஹாசன் வென்றார். இந்த விருது சினிமாவை மறுவடிவமைப்பவர்கள், கலாச்சாரங்களை இணைப்பவர்கள் மற்றும் உலகை ஊக்குவிப்பவர்களாக இருக்கும் கலைஞர்களுக்கு கௌரவிக்கும் விதமாக வழங்கப்படுகிறது. இந்த விருதை வாங்கும் முதல் நபராக கமல்ஹாசன் இருந்துள்ளார். இவருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.