Advertisment

'கமல்ஹாசன் சந்திக்காத பிரச்சனைகளே இல்லை' - சுஹாசினி 

maniyarfamily

suhasini

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பூமராங்'. 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் இசை தகட்டினை கலைப்புலி எஸ் தாணு, சத்யஜோதி தியாகராஜன் வெளியிட, சுஹாசினி மணிரத்னம் மற்றும் சமுத்திரகனி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகை சுஹாசினி பேசும்போது.....

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

"மூன்றாம் பிறை படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க நான் பெங்களூர் போனபோது, சத்யஜோதி தியாகராஜன் சாரை பார்த்த நினைவுகள் இந்த நேரத்தில், இந்த மேடையில் ஞாபகம் வருகிறது.திட்டமிட்ட படி, நேர்த்தியான முறையில் படப்பிடிப்பு நடக்கும். மெட்ராஸ் டாக்கீஸின் செல்லப்பிள்ளை கண்ணன். எங்கள் கம்பெனியில் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர் பங்கு தான் அதிகம் இருக்கும். அவருக்கு நகைச்சுவை உணர்வும் ரொம்ப அதிகம். நீங்கள் உங்களுக்கு பிடித்த இயக்குனராக இருக்க வேண்டும். என் வாழ்க்கையில் முதல் 25 ஆண்டுகள் கமல் உடனும், அடுத்த 30 ஆண்டுகள் மணிரத்னம் உடனும் கழித்திருக்கிறேன். அவர்கள் சந்திக்காத பிரச்சினைகளே இல்லை. இன்றும் கமல் விஸ்வரூபம் 2 படத்தை ரிலீஸ் செய்து வருகிறார். அதர்வா உங்கள் திறமைகள் உங்களுக்கு தெரியும், யாருக்கும் உங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை, படத்தின் ட்ரைலரை பார்த்த பிறகு கூட, மணிரத்னத்துக்கு இது என்ன மாதிரி படம் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவே படத்தின் முதல் வெற்றி" என்றார்.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

atharvaa boomarang
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe