Skip to main content

"அடக்குவது என்று நாம் சொல்லுவதில்லை" - ஜல்லிக்கட்டு குறித்து விளக்கமளிக்கும் கமல்

Published on 30/07/2022 | Edited on 30/07/2022

 

 Kamal explains about jallikattu

 

தமிழக அரசு நடத்தும் சர்வதேச 44-வது சதுரங்க போட்டிகள் மாமல்லபுரத்தில் நேற்று  (29.07.2022) முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இப்போட்டியின் முதல் சுற்றின் முடிவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதனிடையே சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கடந்த 28-ஆம் தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற தொடக்க விழாவில் பல கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் வரலாறு குறித்த சிறப்புத் தொகுப்புக்கு நடிகர் கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்திருந்தார். இந்த கலை நிகழ்ச்சிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் மேற்பார்வை கொண்டார். அதற்காக விக்னேஷ் சிவன் மற்றும் அவரது குழுவை பலரும் பாராட்டி வருகின்றனர். 

 

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில், கலை நிகழ்ச்சிக்காக கமல்ஹாசனுடன் நடந்த உரையாடல் வீடியோவை தற்போது பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் "உலக நாயகன் கமல்ஹாசனுடன் நான் செலவழித்த சில மணி நேரங்கள் அவரது அருள் எனக்கு கிடைத்தது. அவருடைய அறிவு, அவர் அளித்த விளக்கங்கள் மற்றும் அவர் சேர்த்த நுணுக்கங்கள்.. அவருடனான இந்த குறிப்பிட்ட உரையாடல் என்னால் மறக்க முடியாதது" என குறிப்பிட்டு ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் "ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு, மாடுபிடி என்பதில் கூட காளை அடக்குதல் என்று நாம் சொல்லுவதில்லை. ஏனென்றால் அடுத்த நாள் அந்த மாட்டை விவசாயத்திற்கு கொண்டு போய்விடுவார்கள்" என்று விக்னேஷ் சிவனிடம் கமல் விளக்கமளிக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

இதனிடையே ரஜினிகாந்த் விக்னேஷ் சிவனை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளபக்கத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள பதிவில், "என்றும் நினைவில் வைத்திருக்க கூடிய நிகழ்வு. நன்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், நிகழ்வின் போது நேரில் வந்து பாராட்டியதற்கும் நிகழ்வு முடிந்த பிறகு தொலைபேசி வாயிலாக அழைத்ததற்கும். ஒலிம்பியாட் நிகழ்வை பற்றி உங்கள் குரலையும் பாராட்டுக்களையும் கேட்பதில் மகிழ்ச்சி. நீங்கள் அங்கு இருப்பது அந்த நாளை இன்னும் அழகாக்கியது" என குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்ரம், லியோ பட ஸ்டைலில் ரஜினி 171 - லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அப்டேட்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
lokesh kanagaraj rajinikanth movie thalaivar 171 title teaser update

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தை தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அது தற்போது தள்ளி ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் 22ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், புது போஸ்டரை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் டைட்டில் டீசர் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக லோகேஷ் இயக்கிய விக்ரம் மற்றும் லியோ படங்களுக்கும் டைட்டில் டீசர் வெளியானது. இது இரண்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அதே ஃபார்முலாவை ரஜினி 171 படத்திலும் லோகேஷ் தொடர்கிறார். 

Next Story

“அவுங்களை சாகுற வரைக்கும் ஜெயில்ல போடணும்” - ரஜினிகாந்த் ஆவேசம்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
rajinikanth latest speech

சென்னை வடபழனியில் நடந்த தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் ரஜினிகாந்த். இதில் மருத்துவமனை குறித்தும் தனது உடல் நலம் குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்தார். 

அதன் ஒரு பகுதியாக, “25 வருஷமா நான் எந்த திறப்பு விழா நிகழ்ச்சிகளுக்கும் போகவில்லை. ஏனென்றால், எந்த ஒரு கட்டடத்தை திறந்து வைத்தாலும் ரஜினிக்கும் அதில் பங்கு உண்டு. அந்த நிறுவனத்துடன் ரஜினிகாந்த பார்ட்னராக இருக்கிறார், அந்த நிறுவனமே ரஜினியுடைது தான் அவருடைய பினாமியில் நடத்துறாங்க என சொல்லுவாங்க. 

என் உடம்பு பல மருத்துவமனைகளிலிருந்து குணமடைஞ்சிருக்கு. அதனால் டாக்டர்கள், நர்சுகள் மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு. அவர்களின் உதவியினால் தான் நான் இன்னும் வாழ்ந்திட்டு இருக்கேன். ஃப்ளாட்ஸ்களுக்கு விளம்பரம் கொடுக்கும் போது, பக்கத்திலே ரெயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், ஸ்கூல்,  மளிகை கடை, மார்க்கெட் இருக்கு என்கிறார்கள். ஆனால் மருத்துவமனை இருக்கு என யாருமே விளம்பரம் செய்வதில்லை. அது எல்லாத்தை விட மருத்துவமனை தான் முக்கியம். இப்போது யாருக்கு எந்த வயதில் எந்த நோய் வரும் என தெரியவில்லை. காத்து, தண்ணீர் என எல்லாமே மாசுபட்டுவிட்டது. குழந்தைங்க மருந்தில் கூட கலப்படம் பண்றாங்க. அவுங்களை சாகுறவரைக்கும் ஜெயில்ல போடணும்” என ஆவேசமாக பேசினார்.