style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="6542160493" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பிக் பாஸ் சுஜா வருணிக்கும் சிவாஜியின் பேரன் சிவாஜிதேவ் என்ற சிவகுமாருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமணத்துக்கான முதல் அழைப்பிதழை சுஜா வருணி கமல்ஹாசனை சந்தித்து நேரில் வைத்துள்ளார். அப்போது கமலுடன் சுஜா, சிவகுமார் இணைந்து போட்டோ எடுத்துக்கொண்டனர். தற்போது அந்த போட்டோ சமூக வலைதளைங்களில் வைரலாகி வரும் நிலையில் இச்சந்திப்பு குறித்து சுஜா வருணி பேசியபோது..."என் திருமணத்தை எனது தந்தை இடத்தில் இருந்து கமல் தான் நடத்திவைக்க உள்ளார். என் தந்தை சமீபத்தில் மறைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதை நான் பகிர்ந்துகொண்டு, கமல் தான் என் திருமணத்தின்போது தந்தை இடத்தில் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். என் விருப்பத்தை அவர் நிறைவேற்றி வைக்க உள்ளார்" என்றார்.