Advertisment

"எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார்" - கமல் இரங்கல்

kamal condolences post about crazy mohan wife passed away

பிரபல நகைச்சுவை நடிகரும், கதை, திரைக்கதை ஆசிரியரும், வசனகர்த்தாவும், நாடகக் கலைஞருமான கிரேஸி மோகன்(66) மாரடைப்பால் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி காலமானார். இவரது மறைவு திரையுலகத்தில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து கிரேஸி மோகனின் நெருங்கிய நண்பரான கமல்ஹாசன், "நட்பிற்கு முடிவு என்பது கிடையாது. அவரது குடும்பம் ஒரு அற்புதமான கூட்டுக் குடும்பம். அவர்களுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் ஆறாது, போதாது" என உருக்கமாகப் பதிவிட்டிருந்தார்.

Advertisment

இந்த நிலையில் கிரேஸி மோகனின் மனைவி நளினி கிரேஸி மோகன் நேற்று (18.04.2023) காலமானார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவைப்பகிர்ந்துள்ளார் கமல்ஹாசன். அந்த பதிவில், "எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் நளினி கிரேஸி மோகன் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

crazy mohan ACTOR KAMAL HASSHAN
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe