தமிழ் திரையுலகில் மிகவும் பழமை வாய்ந்த தயாரிப்பு நிறுவனமாக இருப்பது ஏவிஎம். இதற்கு சொந்தமான ஸ்டுடியோஸ் வடபழனியில் உள்ளது. இதிலுள்ள ஒலிப்பதிவு கூடத்தில் கடந்த 1955ஆம் ஆண்டிலிருந்து பணிபுரிந்தவர் சம்பத்.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1584956668553-0'); });
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1584957472633-0'); });
தொடக்கத்தில் பயிற்சி ஊழியராக தன் வாழ்க்கையை ஏவிஎம் ஸ்டூடியோஸில் தொடங்கி, 1960ஆம் ஆண்டு பார்த்திபன் கனவு என்னும் படத்தின் மூலம் ஒலிப்பதிவாளராகினார் சம்பத். 2008ஆம் ஆண்டு வரை சுமார் 52 ஆண்டுகள் ஏவிஎம் ஸ்டூடியோஸிலேயே ஒலிப்பதிவாளராக பணியற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
மூன்று முறை தமிழக அரசின் விருது வென்ற சம்பத், நேற்று மாலை வயது மூப்பின் காரணமாக காலமானார். இவரது மறைவிற்கு ஏவிஎம் நிறுவனமும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவருடைய மறைவுக்கு கமல் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "ஏவிஎம்மின் சம்பத், ஒரு உண்மையான தொழில்நுட்பக் கலைஞர். அவருக்கு என் வணக்கங்கள். என் சிறுவயதிலிருந்து, அவர் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருப்பதைபார்த்து வருகிறேன். துறையில் திறன் வளர்ப்பு குறித்து சில வருடங்களுக்கு முன் நாங்கள் பேசினோம். இதுபோன்ற மனிதர்கள் மறைவதில்லை, அவர் கற்ற அறிவை மற்றவர்களுக்கும் மாற்றிவிட்டுப் போகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.