/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kam.jpg)
படத்துக்கு படம் கெட்டப்பை மாற்றும் பழக்கம் கொண்டவர் உலகநாயகன் கமல்ஹாசன். தான் நடித்த படங்களில் அதிக கெட்டப் போட்ட இந்தியாவின் ஒரே நடிகர் இவர் தான். இந்நிலையில் சமீபத்தில் அரசியலிலும் காலடி எடுத்து வைத்து மக்கள் நீதி மய்யம் என தன் கட்சி பெயரை அறிவித்த கமல் அதன் பின் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவ்வப்போது பொது மேடைகளில் பேசி வரும் கமல் முழுக்க மீசை, தாடியை வழித்த முகத்தோடு பேசி வந்தார். அதன் பின்னர் புதிய மாற்றமாக தற்போது சில நாட்களாக கமல்ஹாசன் தாடியுடன் புது கெட்டப்பில் பொதுமேடைகளில் காட்சி தந்து கொண்டிருந்தார். எப்போதும் க்ளீன் ஷேவிங்கில் தென்படும் அவர் நரைத்த தாடியுடன் வலம் வந்தது புது ஸ்டைலாக இருந்தது இந்நிலையில் அவர் விருமாண்டி ஸ்டைலில் இருக்கும் புதிய தோற்றத்துடன் கூடிய புதிய புகைப்படங்கள் ட்விட்டரில் வெளியாகி உள்ளது. படத்துக்கு படம் வித்தியாசம் காட்ட வித்தியாசமான அணுகுமுறையாக கெட்டப் மாற்றும் கமல் தற்போது அரசியலிலும் அதே பாணியை பின்பற்றுகிறார். வரும் மாநாட்டிற்காக இந்த கெட்டப் மாற்றமோ என்ற எண்ணம் மக்களிடம் பரவலாக தென்படுகிறதாக பேசப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)