Advertisment

அமிதாப் பச்சனுக்கு எதிராகக் களமிறங்கும் கமல்

kamal is on board of amitabh bachchan project k

Advertisment

அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ப்ராஜெக்ட் கே'. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்க அஸ்வின் தத் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி (12.01.2024) பான் இந்தியா படமாக தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகவுள்ளது.

படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டது. பின்பு குணமாகும் வரை ஓய்வெடுத்ததால் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இப்போது அவர் குணமடைந்ததைத் தொடர்ந்துபடப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் கமல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வில்லன் கதாபாத்திரத்தில் கமல் நடிக்கவுள்ளதாகவும் இதற்காக 20 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதுவரை கமல் தனது கரியரில் வாங்காத சம்பளம் இப்படத்தில் வாங்கவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்தான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ACTOR KAMAL HASSHAN amitabh bachchan prabhas
இதையும் படியுங்கள்
Subscribe