Advertisment

‘கேரள பிறவி’ விழாவில் கமல்ஹாசன் - புகைப்படம் வைரல்

kamal attend Keraleeyam 2023

நவம்பர் 1 ஆம் தேதிமொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட தினமாகக்கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கேரளாவில் 'கேரள பிறவி' என்ற தலைப்பில் இன்றுதொடங்கி 7 ஆம் தேதி வரை மொத்தம் 7 நாட்கள் கொண்டாடத்திட்டமிட்டுள்ளது. இந்த விழா கேரளாவின் முன்னேற்றம், சாதனைகள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கருத்தரங்குகள், கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகிறது.

Advertisment

இந்த நிகழ்வின் தொடக்க விழா இன்று கேரளா திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கேரளா முதல்வர் பினராயி விஜயனோடு ஐக்கிய அரபு அமீரகம், தென் கொரியா, நார்வே, கியூபா ஆகிய நாடுகளின் தூதர்கள் உட்படப் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

Advertisment

இவர்களோடு நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். மேலும் திரையுலகப் பிரபலங்கள் மோகன்லால், மம்மூட்டி, சோபனா, மஞ்சு வாரியர் உள்ளிட்டோரும்கலந்து கொண்டனர். மேடையில் இவர்கள் உள்படப் பலரும் விளக்கேற்றி நிகழ்ச்சியைத்தொடங்கினர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ACTOR KAMAL HASSHAN Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe