உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைதடுக்க மத்திய அரசு தற்போது ஊரடங்கை வரும் மே 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில் திரையுலகினர் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள் மற்றும் சமூகவலைத்தளப் பதிவுகள் மூலமும் கரோனா விழிப்புணர்வைதொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அந்தவகையில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் கரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்று உருவாகி உள்ளது. இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் விரைவில் வெளியாக உள்ளது.