விஸ்வரூபம் 2 படம் வெளியானதை அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. படத்தில் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். சபாஷ் நாயுடு படத்தை எடுப்பதில் முதலில் பிஸியாக இருந்தார் பின்னர் அந்த படம் என்ன நிலையில் இருக்கிறது என்றுகூட யாருக்கும் தெரியவில்லை.

Advertisment

kamal

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு தலைவன் இருக்கிறான் என்ற படத்தை எடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. கமலின் கனவு படமான மருதநாயகத்தை போல இதுவும் ஒரு கனவு படம் என்று சொல்லப்பட்டது. ஆனால், இதுவும் பேச்சுவார்த்தையுடனே முடிவடைந்தது. அரசியல் பிரவேசத்திற்கு பின்பு ஷங்கருடன் கைகோர்த்து இந்தியன் 2 வில் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டு, படத்திற்கு பூஜையும் போடப்பட்டது. பின்னர், ஷங்கர் இருக்கும் பிரச்சனையில் இந்த படமும் கைவிடப்பட்டுவிட்டது என்பது போன்ற செய்திகள் வருகின்றன.

Advertisment

இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஏ.ஆர். ரஹ்மான் கமலுடன் இணைந்து பணிபுரிவதாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த பதிவை பார்த்த பலரும் ஷாக்காகிவிட்டனர். இனி கமல் சினிமாவிற்கே வரமாட்டார் என்று எண்ணியவர்களுக்கு பெரும் வியப்பாக இந்த பதிவு இருந்தது. அந்த ட்வீட்டிற்கு கமல்ஹாசன் பதிலளித்து தகவலை உறுதி செய்தார். லைகா மற்றும் ராஜ்கமல் இண்டெர்னேஷனல் பிலிம்ஸ் இரண்டும் நிறுவனங்களும் இணைந்து தலைவன் இருக்கிறான் என்கிற மாபெரும் பிரமாண்ட படத்தை உருவாக்க இருக்கிறோம். அதில் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்துகொண்டது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கமல் பெருமிதம் கொண்டார்.

கமல்ஹாசனும் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட இருவரும் இணைந்து கடைசியாக பணிபுரிந்த படம் 2000ல் வெளியான தெனாலி. 19 வருடங்கள் கழித்து இருவரும் இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment