Advertisment

ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பரிவ் இயக்கத்தில் கமல்

kamal anbariv movie update

Advertisment

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் இந்தியன் 3 படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை முடித்துவிட்டு அ.வினோத் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருந்த நிலையில், அப்படம் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே மகேஷ் நாராயணன், பா. ரஞ்சித் உள்ளிட்ட இயக்குநர்களுடன் பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அப்படங்கள் பற்றிய அப்டேட் இதுவரை வெளியாகவில்லை. மேலும் இந்தியில் அமிதாப் பச்சன், பிரபாஸ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் கல்கி 2898 ஏடி படத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடிக்கிறார். 'ராஜ் கமல்' மற்றும் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனங்கள் இணைந்து நடிக்கும் இப்படத்தில் த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், ஐஷ்வர்யா லக்‌ஷ்மி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். கமலின் 234வது படமாக உருவாகும் ஏ.ஆர். ரஹ்மான்இசையமைக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கமல் நடிக்கும் புது படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. கமலின் 237வது படமாக உருவாகும் இப்படத்தை ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பரிவ் இயக்குகிறார்கள். இப்படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமாகின்றனர். கமலே தனது நிறுவனமான ராஜ்கமல் இண்டர்னேஷ்னல் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரித்து நடிக்கவுள்ளார்.

Advertisment

ACTOR KAMAL HASSHAN anbarivu KH 237
இதையும் படியுங்கள்
Subscribe