தக் லைஃப் படத்தை தொடர்ந்து ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் கமல். இப்படத்தை அவரது ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் கமலின் 237வது படமாக உருவாகும் நிலையில் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடந்து வந்தது. ஆனால் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. கமல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளதால் சற்று பிஸியாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை தவிர்த்து இந்தியன் 3 படத்தை அவர் கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில் கமலின் 237 வது படம் குறித்து அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் மலையாள ஸ்கிரிப்ட் ரைட்டர் ஷ்யாம் புஷ்கரன் இணைந்துள்ளார். இவர் மலையாளத்தில் ஹிட்டடித்த மகேஷிண்டே பிரதிகாரம்(ஸ்க்ரீன் ரைட்டர்), தொண்டிமுத்தாலும் த்ரிக்சாக்ஷியும்(வசனம் மற்றும் இணை இயக்குநர்), கும்பளங்கி நைட்ஸ்(ரைட்டர் மற்றும் இணை தயாரிப்பாளர், பிரேமலு(இணை தயாரிப்பாளர்) உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் பணியாற்றியுள்ளார். மேலும் மகேஷிண்டே பிரதிகாரம் படத்திற்காக தேசிய விருதும் வாங்கியுள்ளார். இவர் தற்போது கமல் படத்தில் இணைந்திருப்பது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
#KH237 Roar Begins with #SyamPushkaran#KamalHaasan#ActioninAction
— Raaj Kamal Films International (@RKFI) September 12, 2025
A Film By @anbariv@ikamalhaasan#Mahendran@RKFI@turmericmediaTM@magizhmandrampic.twitter.com/mDd1SBG1Y9