Advertisment

குட்டிஹாசனுக்கு கமல் கொடுத்த அறிவுரை!

kamalhaasan

தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சி மூலம் மக்களை அவ்வப்போது சந்தித்து பொது கூட்டங்களில் பேசி வருகிறார். மேலும் சில கல்லூரிகளுக்கு சென்று அங்கு உள்ள மாணவர்களையும் சந்தித்து பேசி வருகிறார். அதே சமயம் விஸ்வரூபம் 2 படத்தின் பின்னணி வேலைகளையும் கவனித்து வரும் அவர் இந்தியன் 2 படத்திற்கும் தயாராகி வருகிறார். இந்நிலையில் தன் இளைய மகள் அக்‌ஷரா ஹாசனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார் கமல். ஜிம்மில் வொர்கவுட் செய்து முடித்த புகைப்படத்துடன் அவர் பதிவிட்டுருப்பதாவது..."ஜிம்மில் என் குழந்தையுடன் உடற்பயிற்சி செய்கிறேன். உடற்பயிற்சி செய்தால், உன் மூளை சுறுசுறுப்பாக இருக்கும். வலுவான உடல், வலுவான சிந்தனையை கொடுக்கும்" என்று தன் இளைய மகள் அக்‌ஷரா ஹாசனுக்கு அறிவுரை வழங்குவது போல் பதிவிட்டிருந்தார்.

Advertisment
aksharahaasan kamalhaasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe