/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Screenshot-2019-08-19-at-4.03.jpg)
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கும் நடிகர் கமல்ஹாசன் அடுத்தாக இந்தியன் 2, தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்கவுள்ளார். இதில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகள் தற்போது தொடங்கியுள்ளன. சென்னையில் நடந்து வரும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், ஜெகன் ஆகியோரது காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. மேலும் வருகிற ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் படப்பிடிப்பில் கமல்ஹாசன் இணையவுள்ளார். இந்த முதல் கட்ட படப்பிடிப்புகள் செப்டம்பர் முதல் வாரத்தில் நிறைவு பெறுகிறது.
Follow Us