வடிவேலு - ஃபகத் ஃபாசில் இருவரும் ‘மாமன்னன்’ படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள படம் ‘மாரீசன்’. இப்படத்தை ஆர்பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சுதீஷ் சங்கர் என்பவர் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

Advertisment

படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. பின்பு ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. வடிவேலு ஃபகத் ஃபாசில் இருவரும் மேற்கொள்ளும் பயணத்தில் என்ன நடக்கிறது என்பதை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதையடுத்து படத்தின் ‘மாரீசா’ பாடல் வெளியானது. இப்படம் நாளை(25.07.2025) வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் இப்படத்திற்கு கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கம் வாயிலாக பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மாரீசன் படத்தை பார்த்தேன். நகைச்சுவைக்கும் ஆழத்திற்கும் இடையில் சிரமமின்றி செல்லும் ஒரு படம். என்னை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தது. மேலும் படத்தின் கிராஃப்ட் ரசிக்கவும் வைத்தது. 

இப்படி ஒரு சிறப்பான படத்தை தொடுத்ததற்காக படக்குழுவினரை பாராட்டினேன். அவர்களிடம் பேசிய அந்த உரையாடல் அற்புதமாக அமைந்தது. ஒரு புதுவகையான அற்புதமான சினிமா. இது போன்ற படங்கள், என்னை ஒரு பார்வையாளராகவும் படைப்பாளராகவும் இயல்பாகவே ஈர்த்துவிடும்” என்றார். 

Advertisment