/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/282_20.jpg)
ஜெயிலர் படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் கன்னட முன்னணி நடிகர் சிவ ராஜ்குமார். இதையடுத்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். பின்பு விஜய்யின் 69வது படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்தது. பின்பு அது கைகூடாமல் போய்விட்டது. இப்போது ஜெயிலர் 2வில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது அவர் கைவசம் உத்தரகாண்டா, 45, பைரவனா கோனே பாட மற்றும் ராம் சரணின் பெடி ஆகியவை கைவசம் வைத்துள்ளார். நடிகராக 120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் நடிப்பதை தாண்டி பாடகராகவும் 15க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
இந்தாண்டு தொடக்கத்தில் புற்று நோய் காரணமாக அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். பின்பு குணமாகி பழையபடி படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இந்த நிலையில் சிவ ராஜ்குமார் திரைத்துறையில் 40ஆண்டை தொடுகிறார். இதையொட்டி அவருக்கு முன்னணி திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு முன்னணி நடிகர்கள் சிரஞ்சீவி, நாகர்ஜூனா, நானி, விஜய் தேவரக்கொண்டா ஆகியோர் வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்து பேசியுள்ளனர். கன்னட நடிகர் கிச்சா சுதீப் எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து பதிவு போட்டுள்ளார். தமிழ் திரையுலகில் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் நெல்சன் ஆகியோர் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
கமல் வெளியிட்ட வீடியோவில், “சிவ ராஜ்குமாரை தம்பி, மகன் என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். எப்படி பார்த்தாலும் சிவ ராஜ்குமார் என் மகன் மாதிரி, அவருக்கு நான் சித்தப்பா மாதிரி. இது 40 வருஷத்துக்கு மேலாக இருக்கிறது. ராஜ்குமார் அண்ணா எனக்கு காட்டின அன்பு நான் எதிர்ப்பாக்காதது. அதற்கு காரணம் நாங்கலெல்லாம் ஒரே ஸ்டூடியோவில் பிறந்த குழந்தைகள். அப்போது ஆரம்பித்த உறவு கடைசி வரை நீடித்து அவருக்கு பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிவ ராஜ்குமார், தன்னை என் ரசிகர் என்று சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டு பழக்கமானவர். இன்றைக்கு மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்து அவரது அப்பாவின் வழியில் சாதித்து கொண்டிருக்கும் விஷயம், இனியும் சாதிக்கப்போகும் விஷயம் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. சந்தோஷமாக இருங்கள். நிறைய படங்கள் பண்ணுங்கள். உங்களது 50 ஆண்டு திரை பயணத்தில் பேசுவோம்” என்றார்.
  
 Follow Us