Advertisment

"பல புதிய உயரங்கள் தேடி" - ஷங்கருக்கு கமல் வாழ்த்து

kamal about indian 2 and shankar

Advertisment

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். முன்னதாக இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சென்னை, திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்தது.

இதையடுத்து தென்னாப்பிரிக்கா மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பு நடந்த நிலையில் அங்கு கமலின் காட்சிகளை படமாக்கி முடித்தனர். பின்பு அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. அண்மையில் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் வில்லன் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் இப்படம் குறித்து கமல்ஹாசன் குறிப்பிட்டு ஷங்கருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்தியன் 2 படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் ஷங்கர். இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி" என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவருக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

Advertisment

ACTOR KAMAL HASSHAN director Shankar indian 2
இதையும் படியுங்கள்
Subscribe