Advertisment

"இந்தியன் 2, இந்தியன் 3 ஒரு அரசியல் மேடையாக மாறும்" - கமல்ஹாசன்

kamal about indian 2 and indian 3

திரைத்துறையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக சகலகலாவல்லவனாகத்திகழ்பவர் கமல்ஹாசன். 'ராஜா கைய வெச்சா... அது ராங்கா போனதில்ல' என்ற அவரது பாடலின் வரிகளுக்கு ஏற்றது போல் இயக்குநர், பாடகர், நடன அமைப்பாளர் என கிட்டத்தட்ட சினிமாவில் அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றியவர். தமிழ் சினிமாவை இந்திய அளவில் தாண்டி, உலக அளவிலும் எடுத்துச் சென்றார். அதனால் உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசன், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

Advertisment

திரைப்படங்களைத்தாண்டி மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை கமல் நடத்தி வரும் நிலையில், கட்சி சார்பில் நடைபெற்ற பிறந்தநாள் விழா கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது, "நாடாளுமன்றத்தில் மக்களின் குரலின் கேட்க வேண்டும். அது மக்கள் நீதி மய்யத்தின் குரலாக இருக்க வேண்டும். அரசியலில் என்ன பண்ண வேண்டும் என்ன, என்ன திட்டம் என்பதை பற்றி இன்றைக்கு பேச வேண்டியதில்லை. ஆனால் வேலை காத்திக்கிட்டு இருக்கு. 100 மடங்கு வேலை இருக்கு. சிறப்பான சூழல் நம்மை சுற்றி வலம் வருகிறது. அதை நாம் பயன்படுத்திக்க வேண்டும். அதற்காக என்னுடைய கலையின் மூலமாக நான் சொல்லிக்கொள்வதை சொல்லிக் கொண்டிருக்கிறேன். இந்தியன் 2, இந்தியன் 3 வெளியாகும் பொழுது அது ஒரு அரசியல் மேடையாக மாறும். அதையெல்லாம் பார்க்க வேண்டும். அதில் செய்திகள் இருக்கின்றன" என்றார்.

Advertisment

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரண்டு பாகங்களாக வெளியாவதாக தகவல்கள் உலா வந்த நிலையில் இன்று கமல் அதை உறுதி செய்துள்ளார். இப்படத்தை முடித்துவிட்டு அ.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் கமலின் 233வது படமாக உருவாகிறது. இதையடுத்து தனது 234வது படமாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே மகேஷ் நாராயணன், பா. ரஞ்சித் உள்ளிட்ட இயக்குநர்களுடன் பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளார்.

Makkal needhi maiam ACTOR KAMAL HASSHAN
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe