kamal about his 64 years of industry

இந்தியத்திரைத்துறையில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வரும் கமல்ஹாசன், கிட்டத்தட்ட அனைத்து சினிமா துறைகளிலும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான 'களத்தூர் கண்ணம்மா' படம் வெளியாகி இன்றுடன் 63 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் திரைத்துறையில் 63 ஆண்டுகளைக் கடந்து 64 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் கமல்ஹாசன். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், "உலக நாயகன் மற்றும் சினிமாவை உயர்த்த அவரின் சோர்வில்லாத உழைப்புக்கிடையே எதுவொன்றாலும் நெருங்க முடியாது" என ட்விட்டரில் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதியும், ட்விட்டரில் கமலின் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்தினார்.

Advertisment

இந்நிலையில் கமல்ஹாசன் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக" என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment