Advertisment

கமலுடன் இணைந்த முன்னணி பிரபலங்கள் - எகிறும் எதிர்பார்ப்பு

kamal 234 casting update

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை முடித்துவிட்டு அ.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் கமலின் 233வது படமாக உருவாகிறது. இதையடுத்து தனது 234வது படமாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே மகேஷ் நாராயணன், பா. ரஞ்சித் உள்ளிட்ட இயக்குநர்களுடன் பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளார்.

Advertisment

இதில் மணிரத்னம் படத்தை கமல்ஹாசனும் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து வழங்க 'ராஜ் கமல்' மற்றும் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனங்கள் தயாரிக்கின்றனர். இசைப்பணிகளை ஏ.ஆர். ரஹ்மான் மேற்கொள்கிறார்.இந்த நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா கமிட்டாகியுள்ளார். மேலும் துல்கர் சல்மானும் இப்படத்தில் இணைந்துள்ளார். கமல்ஹாசனும் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து வழங்க 'ராஜ் கமல்' மற்றும் 'மெட்ராஸ் டாக்கீஸ்' நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இசைப்பணிகளை ஏ.ஆர். ரஹ்மான் மேற்கொள்கிறார். அதோடு தற்போது ஜெயம் ரவியும் இணைந்துள்ளார்.

Advertisment

ஏற்கனவே மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தின் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதையடுத்து தற்போது முன்னணி பிரபலங்கள் இணைந்து வருவதால் தற்போது எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

ACTOR KAMAL HASSHAN dulquer salman jayam ravi KH 234 maniratnam trisha
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe