Skip to main content

"'மாநாடு' செட்டுல செம ஜாலியா இருக்கப்போறோம்னு நெனச்சேன். ஆனால்.." - கல்யாணி பிரியதர்ஷன் 

Published on 23/06/2021 | Edited on 23/06/2021
hhssabs

 

'ஈஸ்வரன்' படத்தைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் 'மாநாடு'. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். நீண்ட இழுபறிக்குப் பிறகு தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், படத்தின் மோஷன் போஸ்டரும் டீசரும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து 'மாநாடு' படத்தில் இடம்பெற்றுள்ள 'மெஹெரசைலா' என்ற பாடலை முதல் பாடலாகப் படக்குழு வெளியிட்டது. 

 

இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தப் பாடல் உருவான விதம் குறித்தும், படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்தும் இப்பட நாயகி நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தின் வழியாகப் பகிர்ந்துகொண்டார். அதில்... "'மாநாடு' படத்துல நடிக்க அழைப்பு வந்ததும் செட்டுல செம ஜாலியா இருக்கப்போறோம்னு சந்தோஷமா இருந்துச்சு. ஆனா சிம்பு கூட டான்ஸ் ஆடனுமே அப்படின்னதும் அவருக்கு ஈடு கொடுத்து நம்மளால மேட்ச் பண்ணி ஆட முடியுமான்னு ஒரு டென்ஷனும் இருந்துச்சு. ஆனா ராஜூ சுந்தரம் மாஸ்டர் என்னோட டென்ஷனைப் புரிஞ்சுக்கிட்டு எனக்கு வசதி பண்ணிக் கொடுத்தார். இப்படத்தில் நடித்தது புது அனுபவமாக இருந்தது” என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜெயம் ரவியின் பான் இந்தியா படம் - கமிட்டான இரண்டு பிரபல கதாநாயகிகள்

Published on 05/07/2023 | Edited on 05/07/2023

 

jayam ravi pan india movie under vels production update

 

ஜெயம் ரவி, தற்போது அந்தோணி பாக்யராஜ் இயக்கும் 'சைரன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க முக்கியக் கதாபாத்திரத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 

 

இதனிடையே அஹமத் இயக்கும் 'இறைவன்' படத்தில் நடித்துள்ளார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ராஜேஷ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இதையடுத்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் ஜெயம் ரவி. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் 18 மொழிகளில் வெளியிடவுள்ளதாகக் கூறப்பட்டது. 'ஜீனி' என்ற தலைப்பில் புவனேஷ் அர்ஜுனன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கவுள்ளதாகவும் கதாநாயகியாக தெலுங்கு இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. 

 

இந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது. மேலும் பட போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் 25வது படமாக உருவாகிறது. ஏற்கனவே தகவலில் கூறப்பட்டது போல 'ஜீனி' என்ற தலைப்பில் புவனேஷ் அர்ஜுனன் இயக்குகிறார். மேலும்  கீர்த்தி ஷெட்டி கமிட்டாகியுள்ள நிலையில் கல்யாணி ப்ரியதர்ஷனும் படத்தில் நடிக்கிறார். மேலும், ‘மாலை நேரத்து மயக்கம்’ மற்றும் அண்மையில் வெளியான ‘மாடர்ன் லவ் சென்னை’ வெப் தொடரில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘நினைவோ ஒரு பறவை’ மூலம் கவனம் ஈர்த்த வாமிகாவும் நடிக்கிறார். பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. 

 

 

 

Next Story

சரித்திர படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால்

Published on 12/11/2021 | Edited on 12/11/2021

 

marakkar lion of the arabian sea movie release date announced

 

பிரபல மலையாள இயக்குநர்  பிரியதர்ஷன் இயக்கத்தில், நடிகர் மோகன்லால் 'மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்' என்ற சரித்திர படத்தில் நடித்துள்ளார். இப்படம் 100 கோடி பட்ஜெட் செலவில் உருவாகியுள்ளது. இதில், அர்ஜுன், பிரபு, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

 

'மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்' படத்தின் பணிகள் அனைத்தும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே முடிவடைந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக இப்படம் திரையரங்கில் வெளியாவதில் சிக்கல் எழுந்தது. இதனைத்தொடர்ந்து படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.

 

இந்நிலையில், நடிகர் மோகன்லால் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "‘மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்’ திரைப்படம் வரும் டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.