Advertisment

கமல் படத்தில் நடிக்கும் மற்றொரு மலையாள நடிகர்!

bfdsbsdbs

‘மாஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசனை நாயகனாக வைத்து படம் இயக்குகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இப்படத்திற்கு 'விக்ரம்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு சிறு டீசர் வெளியிட்டு படக்குழு அறிவித்தது. சட்டமன்றத் தேர்தல் பணிகளில் கமல்ஹாசன் கவனம் செலுத்திக்கொண்டிருந்த வேளையில், இப்படத்திற்கான ஆரம்பகட்டப் பணிகளில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுவந்தார். அதன் பிறகு ஏற்பட்ட கரோனா பரவல் காரணமாக படத்தின் பணிகளை முழுவீச்சில் தொடங்குவதில் தடங்கல் ஏற்பட்டது. தற்போது கரோனா பரவலின் தாக்கம் குறைந்துள்ளதால், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மீண்டும் படப்பிடிப்புகள் ஆரம்பமாகியுள்ளன.

Advertisment

இதனால் 'விக்ரம்' படப்பிடிப்பும் சமீபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் என மூவரும் மிரட்டலான தோற்றத்தில் இருக்கும் இந்தப் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகிவரும் நிலையில், 'விக்ரம்' படத்தில் மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக அவர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.

Advertisment

Kamal Haasan lokesh kanagaraj vikram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe