/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/19_39.jpg)
பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெய்ராம், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியான படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. 'யாழி ஃபிலிம்ஸ்' மற்றும் 'நீலம் ப்ரொடக்ஷன்ஸ்' இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தென்மா இசையமைத்துள்ளார். சமூகத்தில் காதலின் பரிணாமங்களை பற்றி பேசும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்த திரைபிரபலங்கள் பலரும் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் காளிதாஸ் ஜெய்ராம் மற்றும் துஷாரா விஜயன் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி 'மாரி 2' படத்தை தொடர்ந்து பாலாஜி மோகன் இயக்கும் புதிய படத்தில் இருவரும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)