Jiiva

ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'களத்தில் சந்திப்போம்'. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ராஜசேகர் இயக்கியுள்ளார். இவர், விமல் நடிப்பில் வெளியான ‘மாப்ள சிங்கம்’ படத்தின் இயக்குனர் ஆவார். நட்பை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Advertisment

படத்தின் பணிகள் முன்னரே நிறைவடைந்தும் கரோனா நெருக்கடி காரணமாக படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்தது. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு, 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்கி வருகின்றன. இந்நிலையில், படத்தினை வரும் தைப்பூசத் தினத்தன்று (ஜனவரி 28) திரைக்குக் கொண்டுவர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.