Advertisment

'கலாசல்' ஆக இணையும் வாரிசு நடிகர்கள்  

kalasal

கலைத்தாய் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் P.C.பாலு தயாரிக்கும் படம் 'கலாசல்'. இப்படத்தில் பிரபல நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் கதாநாயகனாக அறிமுகமாக, நாயகியாக பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா நாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இதில் ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர், சாய்பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இயக்குனர்கள் சுந்தர்.C, பத்ரி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய அஸ்வின் மாதவன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 9ஆம் தேதி பழனியில் துவங்கி, கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது. இப்படத்தை பற்றி இயக்குனர் மாதவன் பேசும்போது...."சினிமாவில் சாதனை புரிந்த பிரபல நடிகை அம்பிகாவின் மகன், இயக்குனர், நடிகர், கதாசிரியர் என்று பல அவதாரம் எடுத்த லிவிங்ஸ்டன் மகள் இருவரையும் வைத்து முதல் படம் இயக்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. படத்தின் கதையை ஒரு வரியில் சொல்லவேண்டுமானால் இப்படியும் சொல்லலாம்.. மனிதனின் தேவைகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. கடவுள்கிட்ட வேண்டிகிட்டு நமக்கு தேவை இல்லை என்று நினைக்கிற விஷயங்களை காணிக்கையாக செலுத்தி விட்டு. வேண்டியதை கேட்டு பெறுவது பண்டம்மாற்று முறை மாதிரியான ஒரு வியாபாரம் தான். நாம வேண்டாம் என்று செலுத்துகிற காணிக்கை விஷயங்கள் கார்பரேட் முதலாளிகளால் அப்பாவி மக்கள் மீது எப்படியெல்லாம் திணிக்கப்பட்டு வியாபாரமாக்கப்படுகிறது என்பதுதான் இந்த படத்தின் கதை" என்றார்.

Advertisment
ambika livingston
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe