Advertisment

தனுஷுக்கு இரட்டிப்பு பரிசு - கலாநிதி மாறன் சர்பிரைஸ்

kalanithi maaran wishes dhanush regards raayan success

Advertisment

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்திருந்த திரைப்படம் ராயன். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தனுஷின் 50வது திரைப்படம் என்பதாலும், இப்படத்திலிருந்து வெளியான ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றதாலும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மாதம் 26ஆம் வெளியான இப்படம் கலவையான விமர்சனம் பெற்றது. அதைத் தொடர்ந்து தனுஷ் படத்திற்கு நல்ல வரவேற்பு பெற்றதாக அறிக்கை வெளியிட்டார். அதில், “எனது ஆதரவுத் தூண்களான ரசிகர்களாகிய நீங்கள் பொழிந்த எல்லா ஆசீர்வாதங்களுக்கும் நன்றி. இதுதான் எனக்கு சிறந்த பிளாக்பஸ்டர் பிறந்தநாள் பரிசு” என்று நெகிழ்ச்சியுடன் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இப்படம் தொடர்ந்து 25 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வரும் நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தனுஷை சந்தித்துப் பாராட்டியுள்ளார். மேலும் இரண்டு காசோலை அவருக்குக் கொடுத்து, ஒன்று இயக்கியதற்காகவும் மற்றொன்று நடித்ததற்காகவும் கொடுத்துள்ளார். இதற்கு முன்பு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ஜெயிலர் படத்திற்காக ரஜினி, நெல்சன், அனிருத் உள்ளிட்டோருக்கு விலையுயர்ந்த கார் மற்றும் காசோலையைக் கலாநிதி மாறன் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

sun pictures. Raayan actor dhanush
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe