Kalanidhi Maran gifted a car to Nelson

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Advertisment

வசூலிலும் உலகம் முழுவதும் ரூ. 525 கோடி வசூலித்துள்ளதாக சில தினங்களுக்கு முன்பு படக்குழு அறிவித்த நிலையில், தற்போது ரூ. 600 கோடியைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தின் வசூல் சாதனை படைத்துள்ளதையடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்தார். அப்போது அவரிடம் காசோலை அளித்து பாராட்டு தெரிவித்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

Advertisment

அடுத்ததாக இரண்டு பிஎம்டபிள்யூ கார்களை ரஜினிகாந்த்திடம் காட்டிய கலாநிதி மாறன், ஒன்றைத் தேர்வு செய்துகொள்ளுமாறு சொல்ல ரஜினிகாந்த் பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 மாடல் காரை தேர்வு செய்து கொண்டார். இன்னொரு கார் இயக்குநர் நெல்சனுக்காக இருக்குமோ என்று ரசிகர்கள் வட்டாரத்தில் பேசிக் கொண்ட நிலையில் தற்போது போர்ச் (Porsche) கார் ஒன்றை பரிசளித்துள்ளார். முன்னதாக நெல்சனுக்கு காசோலை ஒன்றையும் கலாநிதி மாறன் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.