Advertisment

“சின்ன படம் பெரிய படம் என்பதைத் தாண்டி நல்ல படத்தில் இருப்பதுதான் முக்கியம்” - கலையரசன்

kalaiyarasan speech in madraskaaran movie event

எஸ்.ஆர் புரொடக்‌ஷன்ஸ்சார்பில் ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன் இணைந்து நடிக்கும் படம் மெட்ராஸ்காரன். திரில்லர் டிராமாவாக உருவாகும் இப்படம் ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதை விவரிக்கிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர்டிஎக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகம், இப்படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நடிகர் கலையரசன் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளார்.

Advertisment

இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதையொட்டி நடந்த டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில், படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். அப்போது, ஷேன் நிகம் பேசியதாவது, “அன்புள்ள மனிதர்களுக்கு வணக்கம், என்ன சொல்வதென்றே தெரியவில்லை, மனது நிறைவாக இருக்கிறது. வாலி ப்ரோ, ஜெகதீஸ் ப்ரோ இருவருக்கும் நன்றி. என் மீதே, எனக்கே சந்தேகம் இருந்தபோது, வாலியும், ஜெகதீஸும் என் மீது நம்பிக்கை வைத்து, இப்படத்தை உருவாக்கியுள்ளனர். என் பட டீசரை வெளியிட்டநடிகர் எஸ் டி ஆருக்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத்தாருங்கள் நன்றி” என்றார்.

Advertisment

கலையரசன் பேசியதாவது, “மெட்ராஸ்காரன், என் ஊர் மெட்ராஸ் ஆனால் இந்தப்படத்தில் புதுக்கோட்டை ஆளாக நடித்துள்ளேன்.ஷேன் நிகாம் மிக அருமையான நடிகர், அவருடன் நடித்தது மிக மகிழ்ச்சி. வாலி அவர் முன்பு செய்த படத்தின் டீசர் காட்டினார், மேக்கிங் பிடித்திருந்தது, படத்தின் கதையும் பிடித்தது, உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன். படம் அருமையாக வந்துள்ளது. சின்னப்படம் பெரிய படம் என்பதெல்லாம் முக்கியமில்லை, நல்ல படத்தில் இருக்கிறோம் என்பது தான் முக்கியம். இப்படத்தின் தயாரிப்பாளர் ஜெகதீஸ் மிக ஆதரவாக இருந்தார். கதையை நம்பி நல்ல படத்தை எடுத்துள்ளார். எல்லோருக்கும் நன்றி” என்றார்.

kalaiyarasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe