kalaiyarasan react about his meme in vaazhai success meet

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி 25 நாட்களுக்கு மேல் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் வாழை. இதை கொண்டாடும் வகையில் இப்படத்திற்கான வெற்றிவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படத்தில் முதன்மை கதாபாத்திரமாக நடித்த இரண்டு சிறுவர்கள். மேலும் இவர்களுடன் இணைந்து நடித்த நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர்.

Advertisment

அப்போது கலையரசன் பேசுகையில், “நான் நிறைய படம் பண்ணியிருக்கிறேன். நீண்ட நாள் கழித்து இந்த படத்திற்கு நிறைய பேர் என்னை பாராட்டினார்கள். சக நடிகர்கள் சினிமா துறையிலிருந்து பாராட்டுவது சாதாரண விஷயம் கிடையாது. அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பாதித்தால் மட்டும்தான் பாராட்டுவார்கள். அந்த விதத்தில் நிறைய பேர் பாராட்டியது சந்தோஷமாக இருந்தது. அதே நேரம் படத்தில் நான் இறந்ததைக் கலாய்த்தனர்.

Advertisment

நான் நடித்த கதாபாத்திரங்கள் இறந்ததை வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் உருவாகி பேசுபொருளாகிறது. இது நல்ல விஷயம்தான். எல்லோரும் படத்தின் மேக்கிங் வீடியோ பார்த்திருப்பீர்கள். படப்பிடிப்பு மாதிரி தெரியாது அந்தளவிற்கு எல்லோரும் நேர்மையாக உழைத்த படம் வாழை. எனக்கு முதல்நாள் படப்பிடிப்பிலேயே இந்த படம் வெற்றி அடையுமென்று தெரியும்” என்றார். மெட்ராஸ், தானா சேர்ந்த கூட்டம், வாழை உள்ளிட்ட பல படங்களில் கலையரசன் கதாபாத்திரம் இறந்துவிடும் நிலையில் தொடர்ச்சியாக அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் இது தொடர்வதாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.