'மெட்ராஸ்ஸிற்கு பிறகு இது எனக்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும்' - கலையரசன்  

கேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் 'ஐரா'. கலையரசன், யோகிபாபு ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க, சர்ஜூன் கே.எம் இயக்கியிருக்கும் இப்படம் மார்ச் 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது விழாவில் பேசிய கலையரசன்....

kalaiyrasan

"இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இது என் கேரியரில் மிகவும் முக்கியமான ஒரு படமாக இருக்கும். சமீப காலங்களில் நான் கடந்து வரும் மிக முக்கியமான கேள்வி 'மெட்ராஸ்' மாதிரி ஏன் படங்கள் பண்றதில்லை என்பது தான். நானும் நிறைய கதைகள் கேட்கிறேன். இந்த படம் பெயர் சொல்லும் ஒரு படமாக இருக்கும். இயக்குனர் சர்ஜூன் உடன் 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தில் நடிக்க வேண்டியது, ஆனால் அது அமையவில்லை. இந்த படத்தில் சர்ஜூன் கேட்டபோது உடனடியாக ஒப்புக் கொண்டேன். இதில் ஹாரர் விஷயத்தையும் தாண்டி மிகச்சிறப்பான கதை இருக்கிறது. சர்ஜூன் கதை எல்லாம் சொல்லி முடித்த பிறகு தான் அந்த பவானி கதாபாத்திரத்திலும் நயன்தாரா தான் நடிக்கிறாங்க என சொன்னார். அது பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. அந்த கதாபாத்திரத்துக்காக அவர் ரொம்பவே மெனக்கெட்டார். நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாக வந்திருக்கிறது" என்றார்.

airaa Nayanthara
இதையும் படியுங்கள்
Subscribe