Skip to main content

மீண்டும் எழும் 'டைட்டானிக்' ; புது ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு

Published on 30/05/2022 | Edited on 30/05/2022

 

kalaiyarasan, aanathi in 'Titanic'; The film crew released the new release date

 

'மெட்ராஸ்' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் 'கலையரசன்'. தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் மற்றும் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் 'குதிரைவால்'. இந்த படத்தில் இவரது நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர். இதனிடையே 'திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட்' சார்பாக சி.வி.குமார் தயாரிக்கும் 'டைட்டானிக்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக கயல் ஆனந்தி நடிக்க காளி வெங்கட், ஆஷ்னா சவேரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜானகிராமன் இயக்கியுள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். கடந்த மே 6-ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிப்பு வந்தது. பின்பு சில காரணங்களால் வெளியாகவில்லை.

 

இந்நிலையில் 'டைட்டானிக்' படத்தின் புது ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. வருகிற ஜூன் மாதம் 24-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை அதிகாரபூர்வமாக சமூக வலைத்தளத்தில் படக்குழு அறிவித்துள்ளது. அதோடு இப்படம் ரொமான்ஸ் கலந்த காமெடி படமாக இருக்கும் எனத் தெரிவித்து ஒரு புதிய வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“படம் பிடிக்கலைன்னா காலனியால் கூட அடிங்க” - இயக்குநர் பகிர் 

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
hotspot director vignesh karthick viral statement

கலையரசன், சோபியா, சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, கவுரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், ஜனனி ஐயர், சுபாஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஹாட்ஸ்பாட்’. விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தை கே.ஜே.பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் நிறுவனங்கள் சார்பில் கே.ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் தயாரித்துள்ளனர். சதீஷ் ரகுநாதன் - வான் என இரண்டு பேர் இசையமைத்துள்ளனர். கடந்த மார்ச் 29 ஆம் தேதி இப்படம் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு திரைப்பட சங்க நிர்வாகிகளுக்கு இப்படம் திரையிடப்பட்டது. இதில் பேரரசு, மந்திர மூர்த்தி உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் படம் பிடிக்கவில்லை என்றால் என்னை காலனியால் கூட அடிங்க என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது,  “படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் இன்னும் தியேட்டரில் நாங்க எதிர்பார்க்கிற கூட்டம் வரவில்லை. ஒரு வேளை ட்ரைலர் பார்த்து சில பேர் வராம இருக்காங்களா என தெரியவில்லை. மலையாள படங்களுக்கு அவ்ளோ சப்போர்ட் பன்றீங்க.

நீங்க கண்டிப்பா தியேட்டருக்கு வந்து பாத்தீங்கனா படம் பிடிக்கும். அப்படி பிடிக்கலைனா காலனியால் கூட என்னை அடிங்க. இதை சும்மா பேச்சுக்கு நான் சொல்லவில்லை. நீங்க படம் பாத்தீங்கனா, நல்லாருக்கு, ரொம்ப நல்லாருக்கு இல்ல சூப்பரா இருக்கு இப்படி தான் சொல்வீங்க. பிடிக்கல, அல்லது ஏண்டா வந்தோம்னு ஃபீல் பண்ண மாட்டீங்க. அப்படி ஃபீல் பண்ணீங்கன்னா முன்னாடி சொன்னது போல காலனியால் கூட அடிங்க. நீங்க தியேட்டருக்கு வந்து பார்த்தால் தான் படம் இன்னும் அதிகளவு மக்களை சென்றடையும். 

கருத்து சொல்கிற படமென்பதால் போர் அடிக்கிற மாதிரி எதுவும் சொல்லவில்லை. பயங்கர ஜாலியா தான் சொல்லியிருக்கிறோம். இது தியேட்டருக்கான படம். ஓடிடியில் பார்க்கும் போது அந்த அனுபவம் இருக்காது. ஆனால் தியேட்டரில் மக்களுடன் பார்ப்பது வேறுமாதியான அனுபவம். அதனால் முடிஞ்ச அளவிற்கு தியேட்டருக்கு வந்து பாருங்க. நீங்க சப்போர்ட் பண்ணி அதிகளவு பேசப்பட்டால் தான், இதுக்கப்புறம் பண்ணும் படமும் வித்தியாசமா பண்ணனும்னு தோணும். இல்லைனா வழக்கம் போல் படம் தான் பண்ண தோணும். அது உங்க கையில் தான் இருக்கிறது” என்றார்.  

Next Story

கயல் ஆனந்தி நடிப்பில் வெளியாகும்  ‘ஒயிட்ரோஸ்’

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
 White rose movie - kayal anandhi

கயல் ஆனந்தி, ஆர்.கே.சுரேஷ், விஜித் நடித்துள்ள திரைப்படம் “ஒயிட் ரோஸ்”. இத்திரைப்படத்தின் டிரைலர் மார்ச் மாதம் 23-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஒரு பாடலான “I’ve Arrived நானே வந்தேன்” எனும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இப்பாடலை நடிகர் ஆர்யா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டு “பவர்ஃபுல் சாங்” என பாடலை பாராட்டி நெகிழ்ந்துள்ளார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கியுள்ளார். பர்மா,என்னோடு விளையாடு, ஒரு கோடை மர்டர் மிஸ்டரி  படங்களுக்கு இசையமைத்த சுதர்ஷன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.