Skip to main content

"தொடர் வெற்றிக்கு சொந்தக்காரர் அவர்" - கலைப்புலி எஸ். தாணு

Published on 04/09/2020 | Edited on 04/09/2020
grgs

 

 

தமிழ் சினிமாவில் தனுஷின் பொல்லாதாவன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் வெற்றிமாறன். பின்னர் ஆடுகளம், விசாரணை படங்கள் மூலம் தேசிய விருது பெற்று தமிழ் திரையுலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். பின்னர் வட சென்னை, அசுரன் படங்கள் இந்தியா முழுவதும் பிரபலமடைந்த இவர் தன் பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இயக்குனர் வெற்றிமாறனுக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ட்விட்டரில் வெற்றிமாறனுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்டார். அதில்...

 

"தொடர் வெற்றிக்கு சொந்தக்காரர்,
இயக்குனர் வெற்றி மாறன் பிறந்த நாள் திரையுலகிற்கு சிறந்த நாள்.
இயக்குனர் வெற்றி மாறனின் #BirthdaySpecialDP வெளியிடுவதில் மகிழ்ச்சி #HBDVetrimaran" என பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“க்ளைமாக்ஸ் மிரட்டல்” - ஜி.வி பிரகாஷ் படத்திற்கு திரை பிரபலங்கள் பாராட்டு

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
producer thanu praised gv prakash kalvan movie

ஜி.வி. பிரகாஷ், பாரதிராஜா, இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கள்வன். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி. ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசைப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். படத்தின் இசை மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. ட்ரைலரை பார்க்கையில் காட்டு யானைகளால் பாதிக்கப்படும் மலைவாழ் மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிந்தது. இப்படம் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இப்படத்தின் சிறப்பு திரையிடல் நடந்து முடிந்த நிலையில் படம் பார்த்த பிரபலங்கள் படக்குழுவை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, “அடர்ந்த காட்டுக்குள் ஒரு பறவையாய் நுழைந்துவந்த அனுபவம். நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய நண்பர்கள் பலரைப் பார்த்த பரவசம்” என அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு பாராதிராஜ மற்றும் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். 

producer thanu praised gv prakash kalvan movie

இந்த நிலையில் ரஜினி, கமல்  உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர் தாணு இப்படத்தை பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “கள்வன், உள்ளம் கவர் கள்வன், பாரதிராஜாவும் , இருவரும் நடிப்பில் மிரட்டுகிறார்கள், க்ளைமாக்ஸ் மிரட்டல், வெற்றி பெற வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.  
 

Next Story

“திரைத்துறைக்கே நல்லது கிடையாது” - நயன்தாராவுக்கு ஆதரவு அளித்த வெற்றிமாறன்

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
Vetrimaran who supports Nayanthara for annapoorani movie issue

நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட பலர் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த மாதம் 1 ஆம் தேதி வெளியான படம் அன்னபூரணி. 'ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனம் மற்றும் 'டிரடண்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தமன் இசையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனமே பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 29 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. 

இப்படம் மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாகக் குறிப்பிட்டு மும்பையைச் சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர், மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் நயன்தாரா, ஜெய், நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்பு இப்படத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் படத்தை தடை செய்யவேண்டும் எனப் பதிவிட்டு வந்தனர். மேலும் மும்பையில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் நீக்கப்பட்டது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் வெற்றிமாறன், புற அழுத்தங்களால் ஓடிடியில் இருந்து நீக்க வைப்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது என்று கூறினார். இது குறித்து அவர் பேசியதாவது, “தணிக்கைச் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என்று எதுவும் இந்தியாவில் இருக்கும் திரைப்பட இயக்குநர்களுக்கு கிடையாது. இது ஓடிடிக்கும் பொருந்தும். ஆனால், மத்திய தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை, புற அழுத்தங்களால் ஓடிடியில் இருந்து நீக்க வைப்பது என்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது. ஒரு படத்தை திரையிட அனுமதிப்பதற்கும் மறுப்பதற்கும் தணிக்கை குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் தணிக்கைக் குழுவின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.