Kalaippuli S Thanu

தமிழ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, இந்திய திரைப்படக் கூட்டமைப்பு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் கூட்டம் மும்பை அந்தேரியிலுள்ள தி கிளப்பில் நடந்தது.

Advertisment

மத்திய அரசு அறிவித்த ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா பற்றியும் திரைத்துறை சார்ந்த பல விஷயங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது . மேலும், இக்கூட்டத்தில் ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா குறித்து மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சரை விரைவில் சந்தித்து பேச இருப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்வில் இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் கலைப்புலி எஸ் தாணு தன்னுடைய வி கிரியேஷன்ஸ் சார்பாக ரூபாய் 15 லட்சம் நன்கொடை வழங்கினார்.

Advertisment

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர்கள் ஹீரசன்த், ரவி கொட்டரக்கரா , சி.கல்யாண் ,டி.பி. அகர்வால், காற்றகட்டபிரசாத் மற்றும் ஏராளமான திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.