Advertisment

கலைமாமணி விருதுகள்; திரைக் கலைஞர்களின் முழு பட்டியல்

177

தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் இயல், இசை, நாடியம், நாடகம், திரைப்படம், சின்னத்திரை, இசை நாடகம், கிராமியக் கலைஞர்கள் மற்றும் இதர கலைப் பிரிவுகளில் வழங்கப்படுகிறது. 

Advertisment

அந்த வகையில் 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திரைப்படத் துறையில் 2021ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, அரங்க அமைப்பாளர் ஜே.கே.எனும் ஜெயகுமார், சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்புராயன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதே போல் 2022ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருதுகள், நடிகர் விக்ரம் பிரபு, நடிகை ஜெயா வி.சி.குகநாதன், பாடலாசிரியர் விவேகா, செய்தித் தொடர்பாளர் டைமண்ட் பாபு மற்றும் புகைப்படக் கலைஞர் லட்சுமிகாந்தன் ஆகியோருக்கு திரைப்படத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 2023ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருதுகள், நடிகர் மணிகண்டன், குணச்சித்திர நடிகர் ஜார்ஜ் மரியான், இசையமைப்பாளர் அனிருத், பின்னணிப் பாடகி ஸ்வேதா மோகன், நடன இயக்குநர் சாண்டி என்கிற சந்தோஷ் குமார், செய்தித் தொடர்பாளர் நிகில் முருகன் ஆகியோருக்கு திரைப்படத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு விருது பிரிவில் வழங்கப்படும் எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸுக்கு வழங்கப்படுகிறது.

இவர்களுக்கு அடுத்த மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.,க.ஸ்டாலின் விருது வழங்கவுள்ளார். இந்த விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருதுப் பட்டயம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  

Advertisment
tamilcinema Actress actor kalaimamani awards
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe